ரஜினிக்காக இணைந்த பிரபலங்கள்

remote
remote

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பதாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு பொலிஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் தர்பார் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட இருக்கின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிடவுள்ளார். மலையாளத்தில் மோகன்லாலும், ஹிந்தியில் சல்மான் கானும் வெளியிட இருக்கின்றனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் பொங்கலிற்கு “தர்பார்” திரைக்கு வெளிவரவிருக்கிறது.