கமல்ஹாசனின் தந்தை சிலை திறப்பு

kamal
kamal

மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது 65வது
பிறந்தநாளையொட்டி தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

இதையடுத்து மக்கள் நீதிமய்யம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

தெளிச்சாத்தநல்லூரில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மையத்தையும் திறந்து வைத்தார். பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டத்தரணிகள் சங்க கட்டிடத்தில் தனது தந்தையின் உருவப்படத்தையும் அவர் திறந்து வைத்தார்.