இந்திய அணிக்கு இலகு வெற்றி

Rohit Sharma 1
Rohit Sharma 1

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3போட்டிகள் கொண்ட T20I தொடரின் 2வது போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பெடுத்தாட்டத்தில் மொஹமட் நஜீம் 36 ஓட்டங்களையும் அணித்தலைவர் மஹ்மதுல்லா. சௌமியா சர்கார் தலா 30 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் யுஸ்வேன்ர சஹல் 2 விக்கட்டுக்களையும், தீபக் சஹர், ஹலீல் அஹமட், வொஷிங்டர் சுந்தர் தலா ஒரு விக்கட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.4 ஓவர் நிறைவில் 02 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.
இந்திய அணியின் துடுப்பெடுத்தாட்டத்தில் அணித்தலைவர் ரோகித் ஷர்மா 85 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 31 ஓட்டங்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காது ஸ்ரேயஸ் ஐயர் 23 ஓட்டங்களையும் ராகுல் 8 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பங்களாதேசின் பந்துவீச்சில் அமினுள் இஸ்லாம் மாத்திரம் இரு விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

ஆடடநாயகனாக இந்திய அணித்தலைவர் ரோகித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் 1-1 என சமப்படுத்தப்பட்டுள்ள தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் அடுத்த போட்டியில் களமிறங்கவுள்ளது.

தொடரை தீர்மானிக்கின்ற அடுத்த போட்டி எதிர்வரும் 10ம் திகதி நாக்பூரில் இடம்பெறவுள்ளது.