மாவீரர் துயிலும் இல்ல சிரமதானம்- இராணுவம் எச்சரிக்கை

nov.27
nov.27

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் இன்று சிரமதான பணிகள் மேற்கொண்டிருந்த வேளையில் அதனை நிறுத்துமாறு உத்தரவிட்ட இராணுவத்தினர் அவ்வாறு நிறுத்தாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளனர்.

தாயகப் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்ல மீள் நிர்மாணிப்பு குழுவினரால் கார்த்திகை 27 மாவீரர் தின நிகழ்வுகளை செய்வதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு, மட்டக்களப்பு, மாவடி முன்மாரி, தாண்டியடி, வாகரை கண்டலடி திருமலை ஆலங்குளம்,செம்மலை உள்ளிட்ட இடங்களில் சிரமதான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறை- கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல மீள் நிர்மாணிப்பு குழுவின் தலைவரான குட்டிமணி மாஸ்டர் என்று அழைக்கப்படும் நாகமணி கிருஷ்ணபிள்ளை இது குறித்து தெரிவிக்கையில்;

சிரமதான பணிகளை இடைநிறுத்த கோரிய இராணுவம் அவ்வாறில்லையேல் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளதுடன் சிரமதான பணியில் ஈடுபட்டவர்களை சிரமதான பணியினை மேற்கொள்ளும் அனைவரையும் புகைபடம் எடுக்க வேண்டும், அத்தோடு தங்களது சுய விபரத்தையும் வழங்குமாறு கோரினர்.

இதனை மறுத்த பின்னர் இவற்றை பதிவு செய்த ஊடகவியலாளரின் அடையாள அட்டையை பரிசோதனை செய்து, அவருடைய அட்டையையும் புகைப்படம் எடுத்த பின்னர் அங்கிருந்து அகன்று சென்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தாயக பிரதேசங்களில் கார்திகை 27 புனித நாளாகவும் அன்று மாவீரர்களை வணங்க இந்த அரசும் இராணுவத்தினரும் தடுத்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் சர்வதேசமும் இலங்கை அரசும் அனுமதியழித்த பின்னரும் இராணுவமும் புலனாய்வு பிரிவும் தடுப்பதேன்” என மாவீரர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.