இங்கிலாந்து அபாரம்- தொடர் சமநிலையில்

england01
england01

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 4வது T20I போட்டியில் இங்கிலாந்து அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பினை தக்கவைத்துக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் மாலன் 103 ஓட்டங்களையும், மோர்கன் 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சான்ட்னர் 02 விக்கட்டுக்களையும், ரிம் சௌதி ஒரு விக்கட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 16.5 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. நியூசிலாந்து சார்பாக ரிம் சௌதி 39 ஓட்டங்களையும், கொலின் மன்ரோ 30 ஓட்டங்களையும் குப்டில் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பர்கின்சன் 4 விக்கட்டுக்களையும், கிரிஸ் யோர்டான் 2விக்கட்டுக்களையும், சாம் ஹரன், டொம் ஹரன், பிரௌன் தலா ஒரு விக்கட்டினையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக டேவிட் மாலன் தெரிவு செய்யப்பட்டார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடர் தற்போது 2-2 என சமநிலை பெற்றுள்ளது.

தொடரை தீர்மானிக்கின்ற அடுத்த போட்டி 10ம் திகதி இடம்பெறவுள்ளது.