6G தொழில்நுட்ப ஆய்வுகளை முன்னெடுக்கும் சீனா!

6g
6g

சீன அறிவியல் தொழில் நுட்பச் சங்கமும், பல பணியகங்களும் அண்மையில் பெய்ஜிங்கில் 6ஆவது தலைமுறை தொழில் நுட்ப ஆய்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. சீனாவின் 6G தொழில்நுட்ப ஆய்வு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதாக இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

6G தொழில்நுட்ப ஆய்வுக்கு சுமார் 10 ஆண்டு காலம் தேவைப்படும் என்று சீனாவின் ஹவா வேய் தொழில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் பணிப்பாளர் யூ ச்சாங் டுங் மதிப்பீடு செய்துள்ளார்.

6G இணையத்தின் விரைவு, 5G இணையத்தை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.