அயோத்தி இராமர் கோவில் தீர்ப்பிற்கு பாகிஸ்தான் அதிருப்தி

pakistan01
pakistan01

அயோத்தி இராமர் கோவில் குறித்து இந்திய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது வெட்கக் கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது, அறக்கேடானது என பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பவாட் ஹுசைன் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலத்தில் இராமர் கோயில் கட்டலாம் எனவும், தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.