ஹொக்கி மகளிர் உலகக் கிண்ணத்தை இரு நாடுகள் நடத்த தீர்மானம்

trophy
trophy

2022 ஆம் ஆண்டில் மகளிருக்கான உலகக் கிண்ண தொடரை ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இந்தத் தொடர் ஜூலை 1 முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் உலகக் கிண்ண தொடரின் ஆட்டங்கள் நடைபெறும் நகரங்களை தொடரை நடத்தும் நாடுகள் பின்னர் அறிவிக்கும் எனவும் சர்வதேச ஹொக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஆடவர் உலகக் கிண்ண ஹொக்கி தொடரை 4ஆவது முறையாகவும் நடாத்த இந்தியாவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதன் மூலம் அதிக முறை உலகக் கிண்ண தொடரை நடத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெறவுள்ளது.