கோட்டா பற்றி சரத் வெளியிட்ட தகவல்!!

fd
fd

அலுகோசுகளில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு கோரி கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்ற பிரசார கூடடத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“2015ம் ஆண்டு வெற்றிக்காக நீங்கள் அளித்த ஆதரவை போன்று வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்களையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

அதற்கு முன்பு மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் நரகத்தில் வாழ்ந்தோம். அது போன்ற உணர்விலே இருந்தோம். அவரை சுற்றியிருந்தவர்கள் அலுகோசுகள். அவர்களில் ஒரு அலுகோசுதான் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார்.

2015ம் ஆண்டு அவரை தோற்கடித்து அவரது மெதமுல்லையில் ஜன்னலில் தொங்க வைத்தோம். அதையே மீண்டும் செய்வோம். வெள்ளை வான் கலாசாரம் எமது ஆட்சிக்காலத்தில் தான் ஒழிக்கப்பட்டது.

மகிந்தவின் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு தூதர்கள் யாரும் அவர்களை சந்திக்க விரும்பவில்லை. அவர்கள் சமாதானத்தை விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம்.

லிபியாவின் சர்வாதிகாரியான கடாபியை, மகிந்த ராஜபக்ச சந்தித்து வந்த பின்னர் அந்த நாட்டு மக்களே புரட்சி செய்து கொன்றனர். அதே போன்றே மகிந்த அரசியல் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்டார்.

தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரம் கோத்தபாய ராஜபக்ச விருப்பத்திற்காக மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் ஒரு யுத்தத்தை இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை .

ஒரு நாட்டிற்குள் இன்னொரு இனம் இரண்டாம் குடி மக்களாக வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை. மொட்டு கட்சிக்குள் இருப்பவர்களின் கை சுத்தமில்லாமல் இருக்கின்றனர். அவர்கள் ராஜாவாக இருக்க விரும்புகின்றனர்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் எமக்குள் சிக்கல்கள் இருந்த போதும் நாங்கள் பேசி முடிவெடுத்தோம். மகிந்த குடும்பம் அவ்வாறில்லை. அண்ணன் சொல்வார் அனைவரும் ஏற்க வேண்டும் .

சஜித் பிரேமதாச என்னை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதாக உறுதி வழங்கியுள்ளார். அவ்வாறான நல்ல மனிதர் சஜித் பிரேமதாச என்பதை கூறிக்கொள்ள விரும்ப விரும்புகிறேன்.

மீண்டும் ஒரு யுத்தம் இந்த நாட்டில் இடம்பெற விடமாட்டோம் . சஹ்ரான்கள் உருவாகவும் விடமாட்டோம் . அவர்களை ஆதரிப்போரையும் கண்காணித்து நல்வழிக்கு கொண்டு வருவோம்.

தண்ணீர் கேட்ட மக்களை சுட்டு கொன்றவர் கோத்தபாய ராஜபக்ச. இன்று இரவில் தூங்க முடியாது தவிக்கிறார் . சுட்டவர் சிறையில் இருக்கிறார் சுடச் சொன்னவர் வெளியில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார்” என கூறியுள்ளார்.