பிள்ளையான் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும்

karuna 1
karuna 1

கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் பிள்ளையான் வரவேண்டு என சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பெரியபோரதீவில் நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்:

“கோத்தாபயவின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழர்கள்
இந்த நாட்டில் நிம்மதியாகவும், பொருளாதாரத்துடனும், பாதுகாப்புடனும் வாழமுடியும். கூட்டமைப்பினர் தமிழர்களை மீண்டும் குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கோத்தாபய ஜனாதிபதியாக வரும்போது கிழக்கில் ஆளுநராகவும் முதலமைச்சராகவும் தமிழர் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிள்ளையான் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும். அப்போதே பாரிய அபிவிருத்திகளை காணமுடியும். நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டு மத்திய வங்கியை கொள்ளையடித்தார்கள். அதனைக்கொண்டே இன்று கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக ஆயிரம் ரூபாவும் உணவு பொதியும் கொடுக்கின்றார்கள்.

இது மதுபானத்திற்காகவும் பணத்திற்காகவும் இடம்பெறுகின்ற தேர்தல் அல்ல. கிழக்கு மாகாணத்தில் எங்கள் உரிமையினை பாதுகாப்பதற்கான தேர்தல். எனவே நாங்கள் மிகவும் கவனமாக செயற்படும்போதே கிழக்கு மாகாண தமிழ் மக்களின் இருப்பினை பாதுகாக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.