கடிதம் வர ஒன்றரை வருடம் ஆகும்- கோட்டா

4a
4a

அமெரிக்க தூதரகத்தினால் அண்மையில் வௌியிடப்பட்ட பெயர் பட்டியில் தனது பெயர் உள்ளடக்கப்படாமைக்கும் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனக்கு தெரிந்த அளவில் இலங்கையில் உள்ள அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துக் கொண்ட சிலருக்கு சுமார் ஒன்றரை வருடத்திற்கு பின்னரே குறித்த குடியுரிமை நீக்கப்பட்டதற்கான கடிதம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் இடம்பெற்ற தனியாள் நேர்காணல் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தனக்கு அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துக் கொள்ள தேவை இருந்ததாகவும், அது தொடர்பில் தான் அமெரிக்க தூதரகத்திற்கு சென்று தெரிவித்ததாகவும் அதன் பின்னர், அவர்கள் தனது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்து சான்றிதழ் ஒன்றை வழங்கியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.