மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்காக செயற்படுவேன்- சஜித்

8 rt
8 rt

நாட்டின் செளபாக்ஜியம் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கம்பஹா, வெலிவேரியவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மக்களை வாழவைப்பது மக்களின் உயரிய பண்பாகும். இதனைத்தான், முன்னாள் பிரதமர் அமரர் பண்டாரநாயக்கவும் கூறிவிட்டுச் சென்றார்கள். எனவே, எனது  அரசின் கீழ், உள்ளம் சாட்சியாக மக்களை வாழவைப்பதற்காக முன்னுரிமை வழங்கி செயற்படுவேன்.

எமது நாட்டில் இன்று பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியுள்ளது. இதனால், மனித வளங்களுக்கு பிரதான சக்தியையும் உறுதியையும்  வழங்குவதே, எமது பிரதான நோக்கமாக உள்ளது. இதன்மூலம், மக்களை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழவைக்க முடியும்.

மக்களுக்குத் தேவையான பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் வழங்கும் அவசியத் தேவையுடையவர்களாக நாம் இருக்கிறோம். அந்தத் தேவையை, எமது புதிய அரசாங்கத்தின் கீழ், நிச்சயமாக உறுதியாகப் பெற்றுத் தருவோம்.

வெலிவேரிய ரத்துபஸ்வல மக்கள், சுத்தமான நீரைக் கேட்டு, வேட்டுக்களைப் பெற்றுக் கொண்ட துக்கரமான சம்பவத்தை மறக்கமாட்டார்கள். எனது ஆட்சியின் கீழ் இப்படியான சம்பவங்கள் நிகழமாட்டாது. இவ்வாறான யுகங்கள் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும். இதை நான் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.