விஞ்ஞாபனங்களை பார்த்து தீர்மானிக்கவும்!!

50 d
50 d

நாட்டின் வடக்கு, கிழக்கிலும் மற்றும் இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மக்கள் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அரசியல் நிலைப்பாட்டை கருத்திற்கொண்டு தங்களது வாக்குகளை சுதந்திரமாக செலுத்த வேண்டும் என்று உலக தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழர்களின் புலம்பெயர்ந்த அமைப்புகளின் கிளை அமைப்பான உலக தமிழர் பேரவை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளது.

அதேநேரம், வீணாக்கப்பட்ட வாக்கு தமது விருப்பத்துக்கு மாறான வேட்பாளரை வெற்றிபெறச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது என்று அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனநாயக சீர்திருத்தங்கள் முன்னேற்றகரமாக உள்ளன. தமிழ் மக்களின் முக்கிய கருத்துக்களான அரசியலமைப்பு சீர்திருத்த நடைமுறையைத் தொடர்தல், அதிகார பகிர்வு, நல்லிணக்க கடப்பாடுகள், சர்வதேச உடன்படிக்கைகள், தீர்மானங்களுக்கு மதிப்பளித்தல் ஆகியவை அதில் உள்ளடக்கியிருக்கின்றன.

அதற்கு மாறாக கோட்டாபயவின் விஞ்ஞாபனத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அதிக அளவில் பேசப்பட்டள்ளது.

எனினும், ஜனநாயக நடைமுறைக்கான கடப்பாடுகள் குறைந்தே காணப்படுகின்றன. மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயக இலங்கையானது அதன் அனைத்து பிரஜைகளுக்கும் எட்டக்கூடிய பெறுமதி மிக்க இலக்காகும்.

எனினும், சிறுபான்மை சமூகத்தினரின் குறிப்பாக தமிழர்களின் அச்சம் மற்றும் அச்ச உணர்வுகளைக் குறிப்பாக ஜனநாயக வரைச்சட்டம் அவர்களது அக்கறைகள் தொடர்பாக மேலும் வாய்ப்புக்களை வழங்குவதில் அதுபோதுமானதாக இல்லை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது தெரிவுக்கு வாக்களிக்கும்போது இவை அனைத்தும் தமிழ் மக்களின் மனத்தில் இருக்கவேண்டும்.

அதேநேரம், கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது மனித உரிமைகள், ஆளுமை மற்றும் சட்ட ஆட்சி என்பவை எவ்வளவு மோசமான நிலையில் இருந்தன என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். வெறித்தனத்துடனான வன்முறை, வலிந்து மேற்கொள்ளப்பட்ட காணாமற்போதல்கள், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல், தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் மீதான அச்சுறுத்தல், வன்முறை ஆகியவற்றை கொண்ட யுகத்துக்கு மீண்டும் செல்லுதல், சர்வதேச கொள்கைகளில் இருந்து ஒதுக்கப்படுதல் ஆகிய விடயங்கள் ராஜபக்ஷ தலைமையின் கீழ் அச்சத்தை ஏற்படுத்தும் அம்சங்களாகும் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.