மும்பையுடன் இணையவுள்ள டிரன்ட் போல்ட்

Trent Boult
Trent Boult

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஐபிஎல் T20 கிரிக்கெட் தொடரின் 2020ம் ஆண்டிற்கான வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

இந்த ஏலத்திற்கு முன் 8 அணிகளும் தங்களுடைய வீரர்களை மற்ற அணிகளுக்கு விற்கலாம் அல்லது மற்ற அணிகளிடம் இருந்து வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். இரண்டும் இல்லை என்றால், வீரர்களை விடுவிக்கலாம். இதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் டெல்லி கபிடல்ஸ் அணிக்காக விளையாடிய டிரன்ட் போல்ட்டை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. போல்ட் 2014 ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். டெல்லி அணிக்காக 2018 மற்றும் 2019 சீசனில் விளையாடியுள்ளார்.

இதுவரை ஐபிஎல் தொடரில் 33 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.