வரட்சியின் கொடுமை – நூற்றுக்கணக்கான யானைகள் உயிரிழப்பு

zimbabwe
zimbabwe

ஆப்பிரிக்க நாடான சிம்பாபேயில் நிலவு கின்ற பஞ்சத்தினால் மக்கள் மாத்திரமல்லாது விலங்குகளும் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன.

இந்நிலையில் ஹவாங்கே தேசிய பூங்காவில் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

பருவமழை கிடைக்கப்பெறாமையினால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் பசி, பட்டினியால் யானைகள் உயிரிழக்க வேண்டிய நிலையேற்படுகின்றது.

தேசிய பூங்காவில் மற்ற வன விலங்குகளை காப்பாற்றும் நோக்கில் 2000 யானைகள், 10இற்கும் மேற்பட்ட சிங்கங்கள், காட்டு நாய்கள், 50 காட்டெருமைகள், 40 ஒட்டக சிவிங்கிகள் ஆகிய விலங்குகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.