அஜித்தின் வலிமை படத்தில் இணையும் வடிவேலு?

vadivel
vadivel

நடிகர் அஜித் குமார் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு வலிமை.

இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது.

அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் பொலிஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

‘வலிமை’ படத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை அவர் மறுத்துள்ளார். இந்நிலையில், வலிமை படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் வடிவேலு கமலின் தலைவன் இருக்கின்றான் படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.