சமுத்திரகனிக்கு கிடைக்கும் வில்லன் வாய்ப்புக்கள்

samuthirakani
samuthirakani

தமிழ் சினிமாவில் தனக்கென்றொரு இடத்தினை தக்க வைத்துள்ள சமுத்திரக்கனி தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனான நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரவி தேஜா நடிக்க இருக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகள் தெலுங்கு ரீமேக்கினை ரவி தேஜாவினை வைத்து சமுத்தரக்கனி இயக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.