மற்றுமொரு வாய்ப்பிற்காக ஏங்கும் மரண தண்டனைக் கைதி

siramantha
siramantha

கடந்த 2005 ஆம் ஆண்டு ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் 19 வயது யுவதியொருவரின் கொலை தொடர்பில் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை கைதியாகியிருந்த சிரமந்த ஜூட் அன்டணி ஜயமகா என்பவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது,

இந்நிலையில் சிறையிலிருந்து திருந்தி வந்துள்ள தன்னை மன்னித்து திருந்தி வாழ்வதற்கு மீண்டுமொரு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

“நான் தவறு இழைத்தேன், அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது, ஆனால் நான் திருந்தியிருக்கிறேன். நான் திருந்தி வாழ ஒரு வாய்ப்பைத் தாருங்கள்.

எனது விடுதலை கடந்த 3 வருட காலம் பரிசீலிக்கப்பட்டு வந்தது. அது இப்போது எடுக்கப்பட்ட ஒரு முடிவல்ல. அத்தோடு அதில் எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை.

சிறைக்குள் இருந்து கல்விகற்று கடந்த 15 வருட காலம் என்னை நான் வருத்தி திருத்திக் கொண்டேன். யுவோன் என் மனதிலிருந்து நீங்க மாட்டார். அவரின் குடும்பத்திடம் பாவமன்னிப்பு கேட்க முயற்சித்தாலும் அதற்கு சாத்தியம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விடுதலை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.