மான்கள் உயிரிழப்பு- வயிற்றினுள் அதிகளவு பிளாஸ்டிக் பைகள்!

death 1
death 1

ஜப்பானில் உள்ள நரா பூங்காவில் உயிரழந்த மான்களின் வயிற்றில் அதிகளவு பிளாஸ்டிக் பைகள் இருந்தமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 18 மான்களில் 12 மான்களின் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ஊழியர்களுக்கு தெரியாமல் பிளாஸ்டிக் பைகளில் உணவுகளை கொண்டு சென்று அங்கேயே விட்டுச் செல்வதனால் அதை மான்கள் விழுங்கும் சூழல் உருவாகிறது. இதையடுத்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு பூங்காவுக்குள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.