மட்டக்களப்பு இளைஞன் புதிய சாதனை!

ilangovan3
ilangovan3

மட்டக்களப்பினைச் சேர்ந்த இளங்கோவன் மதனன் 118 மூலகங்களைக் கொண்ட ஆவர்த்தன அட்டவணையினை இரண்டு நிமிடம் 41 செக்கன்களில் வரிசைக் கிரமமாக அடுக்கி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்தவரினால் இச்சாதனை நிலைநாட்டப்பட்டிருந்தது, அதனை 8 செக்கன்களால் முறியடித்து மதனன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

சாதனை நாயகனான மதனன்இது குறித்து தெரிவிக்கையில்;

சாதனையினையும் உத்தியோக பூர்வமாக குறுகிய நாட்களுக்குள் கின்னஸ் நிறுவனம் வெளியிடும் எனத் தெரிவித்ததுடன், தன்னைப் போன்று எமது பிரதேச சாதனையாளர்களும் தமக்கு பரீட்சையமான துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை தினத்தை குறிக்கும் வகையில் இதன்போது கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.