வெள்ளத்தில் மூழ்கியுள்ள வெனிஸ் நகரம்

venis
venis

இத்தாலியின் வெனிஸ் நகரம் அழகிய கட்டிட சாலையாலும் சுற்றுலா பயணிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. இந்நகரில் தொடர்ந்து பெய்த கனமழையால் கடலலைகளால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.

தொடர் மழையால் நகரின் வரலாற்று சிறப்பு மிக்க பிசிலிகா தேவாலயம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. நகரில் உள்ள சுற்றுலா தலங்கள், கட்டிடங்கள், தெருக்கள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெனிஸ்நகரம் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் லூய்கி புருக்னேரோ அறிவித்துள்ளார். மேலும், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இது 50 ஆண்டுகளுக்கு பிறகு நகரத்தை தாக்கிய 2-வது பெரிய வெள்ளமாகும். கடந்த 1966-ம் ஆண்டு 1.94 மீட்டர் உயரத்துக்கு அலைகள் வீசி இருந்தன.