யாழ் மாவட்ட தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

vethanayagan
vethanayagan

யாழ்.மாவட்ட தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான என். வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 126 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் 89 ஆயிரத்து 538 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

யாழ். மாவட்டத்தில் 531 வாக்களிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட தேர்தல் தொகுதியில் 631 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தான் வாக்கெண்ணும் பணிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் விநியோகம் செய்யப்படவுள்ளன. 33 வாக்கெண்ணும் நிலையங்களும், 11 தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைக்காக 7200 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று (Nov.16) காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள், வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுமென்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகினால் 14.11.2019 தொடக்கம் 19.11.2019 வரையிலான காலப் பகுதியில் அனர்த்த முகாமைத்துவ அலுவலகர்கள் மற்றும் முப்படைகள் சகிதம் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கக்கூடிய அவசரகால செயற்பாட்டு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.