கூட்டமைப்பின் இளைஞர் அணி கோத்தாபயவிற்கு ஆதரவு?

TNA
TNA

தமிழரின் இருப்பிற்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவை ஆதரித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் இளைஞரணி என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களை குழப்பும் நோக்கத்துடனேயே இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி இதனை முற்றிலும் மறுத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கென்று இளைஞரணி இதுவரை இல்லை, அதே போன்று இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அமைப்பு, வாலிபர் முன்னணி என்றே அழைக்கப்படுகிறது.

இதனை முற்றிலும் மறுத்துள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி இது போன்ற போலியான தகவல்களை தவிர்த்து மக்கள் அவதானத்துடன் செயற்பட்டு வாக்களிப்பில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.