மட்டு.மாநகர சபை மேயர் மீது குற்றச்சாட்டு

kanthan
kanthan

மட்டு. மாநகர சபை மேயரினால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் சரியாக செயற்படுத்தப்படவில்லை, அதனால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் உண்டாகவில்லை என தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் காந்தன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மட்டு. மாநகர சபையின் 2020ஆம் ஆண்டிக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்ற வேளை மேயரினால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடர்பில் கேட்ட போதும் மேயரால் தனக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என காந்தன் தெரிவித்துள்ளார்.

மேயரால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்

  • மூன்றாவது குழந்தையை பெறுகின்ற ஒருவருக்கு மாதாந்தம் 5000 கொடுப்பனவு.
  • மக்களுக்கு நகருக்குள் இலவச பஸ் சேவையை ஆரம்பித்தல்.

இவ்வாறான திட்டங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என காந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் மாநகர சபைக்கு உட்பட்ட தனியார் பஸ் தரிப்பு நிலையத்தின் சரியான தீர்மானம்,வரைபடம் அதற்கான அனுமதி யார் வழங்கிய என கேள்விக்குறியா இருக்கிறது . இது தொடர்பில் கோரியபோதும் மேயரால் சரியான விளக்கம் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

2020 நிதி ஒதுக்கீட்டினை கொண்டுவருவதில் எந்த பிரயோசனமும் இல்லை எனவும் மட்டக்களப்பு மாநகர சபையால் கடந்த இரு வருடங்களில் செய்த வேலைகள் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பும் விடுத்துள்ளார்.