டெல்லியில் சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்

oxygen
oxygen

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் சிறிது சீரடைந்து வந்த நிலையில் மீண்டும் காற்றின் தரம் குறைந்து விட்டதால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டண முறையில் சுத்தமான காற்றை விற்பனை செய்யும் ஒக்சிஜன் நிலையம் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதன் நிறுவனர் கூறுகையில்,

கடந்த மே மாதம் இந்த ஆக்சிஜன் நிலையம் தொடங்கப்பட்டதாகவும் சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சாரணமாக உள்ளிழுக்கும் ஒக்சிஜனை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு சுவாசிக்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளரின் தெரிவிற்கேற்ப சுவாசிக்கும் காற்றின் மணத்தை (வெனிலா, செர்ரி, பாதாம், ஸ்பியர்மிண்ட், மிளகுக்கீரை, யூகலிப்டஸ், எலுமிச்சை, ஆரஞ்சு, தோட்ட நறுமணம், இலவங்கப்பட்டை மற்றும் லாவண்டர்) தேர்ந்தெடுக்க முடியும், ஒவ்வொரு நறுமணத்திற்கேற்பவும் விலைகள் மாறுபடும் என தெரிவித்துள்ளார்.