தமிழ் எளிமையான மொழியல்ல – கங்கனா ரனாவத்

kangana
kangana

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகும் படம் ‘தலைவி’.

கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் நடிப்பதை மட்டுமே படக்குழு இதுவரை உறுதிப்படுத்தியுள்ளது.

‘தலைவி’ படத்தில் நடிக்கும் அனுபவம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில்,

“எனக்கு தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. இதன் காரணமாக நான் வசனங்களை மனப்பாடம் செய்கிறேன். தமிழ் நிச்சயம் எளிமையான மொழி அல்ல. நான் ஆங்கிலம் கற்றது போல தமிழை முழுமையாக கற்றுக்கொள்ள நினைத்தேன். ஆனால் தற்போது படத்தின் தேவைக்காக மட்டும் கற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.