டிசம்பரில் தர்பார் இசை வெளியீடு

tharbar3
tharbar3

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீடு சென்னையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ம் திகதி மிக பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ளது.

இதில் பல முன்னணி நடிகர்கள், தென் இந்தியாவின் முன்னணி நடிகர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு பொலிஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.