மயாங் அகர்வாலின் இரட்டைச் சதம்- இந்தியா வலுவான நிலையில்

Mayank
Mayank

இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தனது முதலாவது இனிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

முஸ்பிகுர் ரஹிம் 43 ஓட்டங்களையும், மொமினுள் ஹக் 37 ஓட்டங்களையும்,லிட்டன் தாஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மொஹமட் ஷமி 3 விக்கட்டுக்களையும், இசாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இந்தியா தனது முதலாவது இனிங்ஸின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 496 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மயாங் அகர்வால் 243 ஓட்டங்களையும், ரஹானே 86 ஓட்டங்களையும், ஜடேஜா 60 ஓட்டங்களையும், புஜாரா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அபு ஜெய்ட் 4 விக்கட்டுக்களையும், எபதத் ஹசன், மஹெதி ஹசன் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினார்.

மூன்றாவது நாள் ஆட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.