வாக்களிப்பின் போது மேற்கொள்ளக்கூடாதவை

polling station
polling station

8வது ஜனாதிபதித் தேர்தல் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையத்துக்கு செல்லும்போது பின்வரும் விடயங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு வாக்காளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

  • வாக்களிப்பு மையத்திற்குள் கையடக்கத் தொலைபேசிகள் அனுமதிக்கப்பட மாட்டாது.
  • வாக்களிப்பு, வாக்குச் சீட்டு போன்றவற்றின் புகைப்படங்களை எடுக்கவோ அல்லது சமூக ஊடகங்களில் இடுகையிடவோ
  • கூடாது.
  • வாக்களிக்கும் இடத்தில் கையடக்க தொலைபேசிகளை ஒலிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • வாக்களிப்பு மையத்திலிருந்து 500 மீற்றர் சுற்றளவில் கூட்டம் கூட முடியாது.
  • எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்காளர்களைத் துன்புறுத்துதல், வற்புறுத்த கூடாது.
  • தனியார் வாகனங்களில் சுவரொட்டிகளைக் காண்பிக்க கூடாது.
  • வாக்களிப்பு மையத்தின் அருகே அருகே பதாகைகள் வைப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
  • வாக்காளர்களை குழுக்கள் வாக்களிப்பு மையத்திற்குள் கொண்டு செல்ல முடியாது. முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருடன் மட்டுமே உதவியாளர்கள் செல்ல முடியும்.
  • வாக்களிப்பு மையத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உரத்த இசை அல்லது ஒலிவாங்கிகள் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறான தவறுகளில் ஈடுபடுவோர் பொலிஸாரால் பொறுப்பேற்கப்படுவார்கள் எனவும், இவை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.