கிளிநொச்சி மாவட்டத்தில் 45%வாக்கு பதிவு!!

5 s 1
5 s 1

இலங்கையின் 8 வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் இன்று இடம்பெற்று வருகிறது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7. 00 மணி முதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இம்முறை 89538 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகப் பிரிவில் 100 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்களித்து வருவதனை அவதானிக்க முடிகிறது குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பினை அவதானிக்கும் பொழுது  ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தலா இரண்டு  பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர படையினர் ஆங்காங்கே பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகிறது அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக ஏறத்தாள 1750 அரச உத்தியோகத்தர் கடமையில்  ஈடுபட்டுள்ள துடன் போலீசார் 1275 பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை வாக்குச்சாவடிகளில் வாக்கு வீதமானது 46 சதவீதம் வாக்களிக்க பட்டுள்ளதாகவும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார் அதே சமயத்தில் காலநிலையை அவதானிக்கும்போது தற்சமயம் சாதாரணமான நிலையே காணப்படுகிறது எம்மால் அவதானிக்க கூடிய வகையில் அமைகிறது இதுவரையும் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும் தேர்தல் அத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.