கோத்தாவைப் புறக்கணித்தது வடக்கு

gota mahi
gota mahi

வடக்கு மாகணத்தில் இதுவரை வெளியான தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாண மக்கள் கோத்தபாயவிற்கு எதிரான தங்கள் மனநிலையைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 312,722 (83.86%) வாக்குகளையும் கோத்தபாய 23,261 ( 6.24% ) வாக்குகளையும் பெற்றுள்ளனர். வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 109,598 (84.91%) வாக்குகளையும் கோத்தபாய 12,390 ( 9.60% ) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச யாழ் மாவட்டத்தில் 21.85 % வாக்குகளையும் வன்னி மாவட்டத்தில் 19.07 % வாக்குகளையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.