விளையாட்டு துறை அமைச்சைத் துறந்தார் ஹரின்!!

harin fernando
harin fernando

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சற்றுமுன்னர் தனது அமைச்சுப்பதவி மற்றும் கட்சியின் முக்கிய பதவிகளை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் அமைச்சராக இருந்த காலத்தில் தன்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்த அவர் நல்ல பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர ஆகியோரும் பதவியை இராஜிநாமா செய்துள்ள நிலையில் அடுத்து ஹரின் பெர்னான்டோவும் இராஜிநாமா செய்துள்ளார்.