பிரதமராகிறார் மகிந்த?

mahinda
mahinda

ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் ஆதரவு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அமைச்சுப் பதவிகளையும் கட்சிப் பதவிகளையும் இராஜினாமச் செய்துவரும் நிலையில், மகிந்த ராஜபக்ச அவர்கள் விரைவில் பிரதமராகப் பதவியேற்பார் என தென்னிலங்கைத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலரின் ஆதரவு மகிந்தவுக்கு இருப்பதாகவும் அத்துடன் முஸ்லிம் கட்சிகளும் முகாம் மாறி மகிந்தவை ஆதரிக்கலாம் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச அவர்கள் பதவியேற்றதும் மகிந்த ராஜபக்ச அவர்களைப் பிரதமராக நியமிப்பார் என நம்பப்படுகின்றது.