சஜித் தோல்வியின் விளைவு!

sajith resign
sajith resign

இலங்கையின் 8வது ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் தமது பதவிகளிலிருந்து விலகி வருகின்றனர்.

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தவதில் பக்க பலமாக இருந்தவர்கள் உட்பட பலரும் தமது பதவி விலகலை அறிவித்து வருகின்றனர். மக்கள் ஆணையை ஏற்று தாம் பதவி விலகுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முதலாவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் பிரேமதாச விலகியிருந்தார். அதனையடுத்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர, ஹரின் பெர்னாண்டோ, மலிக் சமரவிக்ரம ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்துள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து கபீர் ஹாசிமும் விலகியுள்ளார்.

அத்துடன், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சரான அஜித் பெரேரா, அமைச்சரவை அந்தஸ்து இல்லாத ஊடகத் துறை அமைச்சரான ருவான் விஜயவர்தனவும் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க இராஜிநாமா செய்யும் பட்சத்தில் எஞ்சியிருக்கும் அமைச்சர்களது
பதவிகளும் பறிபோகும் நிலையுள்ளது.