நாட்டின் தலைவராக கோத்தாபய பதவியேற்பு

president gotabaya
president gotabaya

நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச அனுராதபுர ருவன்வெலி மகா தூபி முன்பாக, பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய முன்னிலையில் கோத்தாபய ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார்.

இந்த பதவியேற்று சுபவேளையில் முற்பகல் 11.45 மணிக்கு ஆரம்பமானது. 11.50 மணிக்கு உறுதியுரை எடுத்துக்கொண்டு கையொப்பமிட்டார்.

கோத்தாபய ராஜபக்சவின் பதவியேற்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மதத் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது அவர் அரசியல் தலைவருக்கான பாரம்பரிய வெள்ளை உடையை முதன்முறையாக அணிந்திருந்தார்.