நயன்தாரா படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்?

Nayantara
Nayantara

‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்க உள்ளார்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு பாடலையும், ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார்களாம். இசையமைப்பாளர்கள் பற்றி விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.