பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்

namitha
namitha

சென்னையில் நடிகை சந்தோஷியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றி நமீதா பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை சந்தோஷியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த கருத்தரங்கில் முன்னணி நடிகைகள், சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளர், இயக்குநர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த நடிகை நமீதா;

‘ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்லாந்திரி என்கிற ஒரு சாதாரண கிராமத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அதை கொண்டாடும் விதமாக 111 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்கிறார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த இதுபோன்ற முயற்சி இயற்கையை பாதுகாக்கும் முயற்சி மட்டுமல்ல. மொத்த கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் ஒரு விஷயமும் கூட.

அந்தவகையில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்.

பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. பெண்கள் வாழப் பிறந்தவர்கள். வீராங்கனைகள். இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நான் அழகு ராணி கிடையாது. லட்சுமி அகர்வாலும் ரம்யாவும் தான் இதற்கு தகுதியானவர்கள். வரலாற்றில் இவர்கள்தான் ஜாம்பவான்கள் என போற்றப்படுவார்கள். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

நான் இதற்கு முன்பு மிகப்பெரிய ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேடையில் இருந்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இல்லாத அளவிற்கு இன்று தான் உண்மையிலேயே நான் பெருமையாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.