அம்பாறை திருக்கோவில் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள மீன்கள்

IMG 20181101 WA0007
IMG 20181101 WA0007

அம்பாறை திருக்கோவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1000 கிலோகிராமிற்கு அதிகம் எடைகொண்ட மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையொதுங்கியுள்ள மீன்களை நாய்கள் மற்றும் காகங்கள் உண்ணுவதாகவும், இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த மீண்களை அகற்ற திருக்கோவில் பிரதேச சபையின் தலைவர் மற்றும் செயலாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் மாசடைந்த நீர் கழிவுகள் சேர்கின்றமையை அடுத்து அந்த கழிவுகளை மீன்கள் உட்கொள்கின்றமை மற்றும் மார்கழி மாதத்தில் கடலில் வளர்கின்ற கடற்பாசியினை மீன்கள் உட்கொள்கின்றமையினால் மீன்கள் இறந்து கரையொதுங்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.