கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு

received 1065449783943722
received 1065449783943722

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியை மீண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமா? என்கிற பரபரப்புக்கு மத்தியில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு சற்று முன்னர் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் கனகையா தவராசா, கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவி வகித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன் படிக்கைக்கு அமைய தமிழீழ விடுதலை இயக்கத்தை சாந்தவர்களுக்கு தவிசாளர் பதவி வழங்கும் நோக்கோடு கடந்த 18.03.2013 அன்று, அவர் தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

அந்தவகையில் குறித்த பிரதேசசபையின் புதிய தவிசாளருக்கான தேர்வு எதிர்வரும் 22.04.2021 இன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது