நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு

DSC 0248
DSC 0248

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு திரை, மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள், அமெரிக்க யூத உலக சேவை நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தினால் இன்று கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சிவபாலன் குணபாலன் வைத்தியசாலை திட்டமிடல் பிரிவு வைத்தியர் ஜோகேஸ்வரன் பிராந்திய வைத்திய பல் வைத்திய அதிகாரி மற்றும் மன்னார் மாவட்ட சுகாதார தரப்படுத்தல் வைத்தியர் சிறி தேவி வேதவனம் வைத்தியசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.