மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்துக்கு பூட்டு!

WhatsApp Image 2021 08 09 at 12.59.55
WhatsApp Image 2021 08 09 at 12.59.55

மட்டக்களப்பு மாமாங்கபிள்ளையார் ஆலயம் 14 நாட்கள் பூட்டுவதாகவும் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாகவும்  நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும்  உற்சவத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்பத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (09) இடம்பெற்ற மண்முனை வடக்குக்கான கொரோனா செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்று சுகாதார சுற்று நிருபத்தை மீறி வருடாந்த தீர்த்தோற்சவத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதையடுத்து தேசிய ரீதியில் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இருந்தபோதும்  இந்த ஆலய உற்சவம் தொடர்பாக கடந்த  கொரோனா செயலணி கூட்டத்தில் 100 பேருக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் அனுமதியையும் சுகாதார சுற்று நிருபத்தை மீறி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இடம்பெற்ற இவ் சம்பவமானது பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனையடுத்து ஆலயத்தை 14 நாட்கள் பூட்டுவதாகவும் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதாகவும்  நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும். உற்சவத்தில் கலந்துகொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தவும் தீர்மானிகக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்க, மட்டு மாநகர பிரதி ஆணையாளர் கே.சிவராஜா, மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பிரதி பணிப்பாளர் வைத்தியர் கிரிசுதன், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் காவல்துறையினர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்