நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்

coronavirus banner
coronavirus banner

நாட்டில் நேற்றைய நாளில், 72,293 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 28,770 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 19,171 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 5,119 பேருக்கு அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியும், 23,679 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

32 பேருக்கு மொடர்னா முதலாம் தடுப்பூசியும், 20 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

1,491 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 42 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.