ஊரடங்கு தளர்த்தப்பட்டது – மக்கள் பொருட்கொள்வனவில் ஆர்வம்

IMG 3275
IMG 3275

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு இன்று காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளதனை  தொடர்ந்து பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெருமளவு ஆர்வம் காட்டி வந்தனர் இதனடிப்படையில் கல்முனை, சாய்ந்தமருது,மத்திய முகாம், கல்முனை ,மருதமுனை ,சம்மாந்துறை,அக்கரைப்பற்று நிந்தவூர் , ஆகிய பிரதேசங்களில் பொருட்களை கொள்வனவு செய் அதிகளவு கூடியிருந்த பொதுமக்கள் முண்டியடிப்பதை காணமுடிந்தது.

கல்முனை பொதுச் சந்தை, சதோச  போன்ற இடங்களில் பெருமளவு வரிசையில் நின்று ஒரு பொருட்களை  கொள்வனவு செய்துவருகின்றனர்.  

பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருவதோடு  மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றா என்பதையும் அவதானித்து வருகின்றனர்.மேலும்  பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் வீதி வீதியாக  கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தி வருகின்றனர்  .

அரசாங்கம் ஏற்கனவே அறிவுறுத்தபடி உரிய சுகாதார முறைப்படி முகவசம் அணியாமல் வருகைதந்தவர்கள் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு   இடங்களுக்குச்   செல்வதை தவிர்ர்ந்து கொள்ளுமாறு பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டனர்.

பொருட்கள் கொள்வனவு செய்ய கட்டுக்கடங்காமல் கூடிவரும் மக்களிடையே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், கல்முனை மாநகர சபை ,  கல்முனை பிராந்திய பொலிஸார் இ இராணுவத்தினரும் இணைந்து மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தி வருகின்ற போதிலும் குவியும் சனக்கூட்டத்தை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.