தமிழரின் பாரம்பரிய வாழ்க்கை முறையே கொரோனா வைரசை முறியடிக்க ஒரே வழி

e fr
e fr

தமிழரின் பாரம்பரிய வாழ்க்கை முறையே கொரோனா வைரசை முறியடிக்க ஒரே வழி என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க .வி விக்னேஸ்வரன் இன்று வாரம் ஒரு கேள்வி பதில் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .

கேள்வி – ஐயா! நீங்கள் அரசியல் மட்டுமல்லாமல் பல விடயங்கள் பற்றியும் தயங்காமல் உங்கள் கருத்துக்களை இந்த ‘வாரத்துக்கொரு கேள்வி’ மூலமாக எம்முடன் பகிர்ந்து வருகின்றீர்கள். இப்பொழுது உலகம் பூராகவும் உச்சரிக்கப்படும் ஒரு சொற்றொடர் தான் ‘கொரோனா வைரஸ்’ என்பது. தமிழர்களுடன் தொடர்புபடுத்தி அது பற்றி உங்கள் சிந்தனைகளை வழங்க முடியுமா? எம் மக்கள் தற்போதைய நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
பதில் – தமிழரின் பாரம்பரிய வாழ்க்கை முறையே கொரோனா வைரசை முறியடிக்க ஒரே வழி என்பதே எனது கருத்து.

  1. அந்த நாட்களில் காலை எழுந்து வீட்டைப் பெருக்கி மஞ்சள் நீர் வீட்டிற்குத் தெளிப்பார்கள். சாணத்தால் முன் வாசலைப் பூசி மொழுகுவார்கள். பின்னர் எம் பெண்கள் கோலம் போடுவர். வாசலில் ஒரு வாளியில் மஞ்சள் நீர் கலந்து வைத்து பக்கத்தில் ஒரு பாத்திரத்தை வைப்பார்கள். வெளியிலிருந்து வருகின்றவர்கள் அனைவரும் செருப்பை வெளியில் வைத்துவிட்டு கை, கால் அலம்பிய பின்னரே உள்நுழைவார்கள்.
  2. அடுத்து எம் பெண்கள் மஞ்சள் பூசி குளித்த பின் தலைவாரி, பூச்சூடி, வீபூதி பூசி, நெற்றிக்கு குங்குமம், சந்தனம் வைப்பார்கள். ஆண்களும் குளித்த பின்னர் விபூதி பூசி சந்தனம் வைப்பார்கள். சிலர் குங்குமம் வைப்பார்கள். இவற்றுள் சாணம், மஞ்சள், விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவை யாவுமே கிருமிநாசினிகள்.
  3. காலையில் கொத்தமல்லி அல்லது சுக்கு (வேர்க்கம்பு அல்லது காய்ந்த இஞ்சி) கலந்த கோப்பியையே உட்கொள்வார்கள்.
  4. மரண வீடுகளுக்குச் சென்று வருவோர் வீட்டினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள். கட்டியிருக்கும் உடை அத்தனையையும் களைந்து கழுவப் போட்டு, தலையில் குளித்த பின்னர் புது உடைகள் உடுத்தே உள்ளே வர வேண்டும். வைத்தியசாலைகளுக்குப் போய்வருவோரும் முற்றாகக் கை கால் அலம்பிய பின்னரே வீட்டினுள் நுழையலாம். குளித்த பின் வாழையிலையில் உணவு உட்கொள்வார்கள். வாழையில் ஓளஷத குணங்கள் உண்டு.
  5. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அவசியம் சாம்பிராணி பிடிப்பார்கள். அல்லது சந்தனத் திரிகளைக் கொழுத்துவார்கள்.
  6. எவரையும் முதன் முதலில் அன்றைய தினம் சந்தித்தால் கை கூப்பியே வணக்கந் தெரிவிப்பார்கள். கைலாகு கொடுத்து வைரசுகளை விலை கொடுத்து வாங்கமாட்டார்கள். சுத்தம் சுகந் தரும் என்பது எமது பண்பாட்டில் ஊறிய ஒரு கருத்து.
  7. வீட்டில் துளசி, வேம்பு, கற்பூரவள்ளி, திருநீற்றுப் பச்சை போன்ற மரங்களை தவறாது வளர்ப்பார்கள். கொத்தமல்லி இலையை உணவுடன் பல முறை கிழமைக்குக் கிழமை சேர்த்துக் கொள்வார்கள்.
  8. காய்ச்சல், தடிமன், மூச்சடைப்பு, தலையிடி என்று வந்தால் மூலிகைகளினால் ஆன கஷhயத்தையே மூன்று நாட்கள் உட்கொள்வார்கள். நோய் போய்விடும். எனக்கு நினைவிருக்கும் வரையில் கொத்தமல்லி, இஞ்சி, பற்படாகம், திப்பிலி, சிற்றரத்தை, மிளகு, அதிமதுரம், கற்பூரவள்ளி, மரமஞ்சள், கறுவா என்று பல மூலிகைகள் வௌ;வேறு தருணங்களில் பாவிக்கப்பட்டன.
  9. தும்மல், இருமல் வந்தால் கிருமிகள் பரவாதிருக்க சால்வையால் அல்லது புடவை நுனியால் முகத்தை மூடி தும்முவதற்குப் பாவிப்பார்கள்.
  10. அக் காலத்தில் மனிதர்கள் மிக அருகில் அமர்ந்திருக்கமாட்டார்கள். சற்று இடைவெளிவிட்டே அமர்ந்திருப்பார்கள். ஆண்களும் பெண்களும் வௌ;வேறாக வீட்டினுள் இருப்பார்கள்.
  11. வெளியாட்கள் வீட்டுக்கு வந்து போன பின் (பொதுவாக தூர இடங்களில் இருந்து வந்து போனபின்) வீட்டை உடனே நீர் கொண்டு அவர்கள் இருந்துவிட்டுப் போன இடங்களை வீட்டார்; கழுவுவார். சாம்பிராணி பிடிப்பார்கள்.
    இவற்றையெல்லாம் எம் முன்னோர்கள் செய்து வந்து பாதி வழியில் நிறுத்திவிட்டார்கள். பொதுவாக னுநவவழட ஐப் பாவிக்கத் தொடங்கினார்கள்.
    இனியாவது எமது பாரம்பரிய தமிழர் வாழ்வு முறையை நாங்கள் பின்பற்றுவோமாக! தென்னிந்திய கடலூரிற்கு நான் முன்னர் சென்று வருவதுண்டு. நான் காலையில் கிராமத்தைச் சுற்றி நடைபவனி வருவேன். ஒவ்வொரு வீட்டிலும் அண்மைக் காலங்களில் கூட நான் அதிகாலையில் கண்டது வாசலை சாணத்தால் மொழுகுதலும், கோலம் போடுதலும், வீட்டு வாசலில் மஞ்சள் நீரை கை கால் கழுவ வைப்பதுமையே!