குருநாகலில் 20 பேருக்கு தொற்று; 326 பேர் கட்டாய சுய தனிமையில்!

4 yd
4 yd

படையினரின் குடும்பங்களை அதிகமாகக்கொண்டுள்ள குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 20 பேர் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிப் பழகிய 326 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடமேல் மாகாண சுகாதாரப் பணிமனையின் பணிப்பாளர் என்.பரீட் தெரிவித்தார்.

அலவ்வ, பொல்கஹவெல, மடஹபொல, நிக்கவெரட்டிய, கொடவெஹெர, தும்மலசூரிய, உடுபத்தாவ, மாவத்தகம, கல்கமுவ, குளியாப்பிட்டிய, மாஹோ, வாரியப்பொல, பண்டாரகொஸ்வத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பணிப்பாளர் பரீட் கூறினார்.

தொற்றுக்குள்ளானவர்கள் குருநாகல் மாவட்டம் முழுவதும் உலாவித் திரிந்துள்ளார்கள் என்று அவர்களுடன் தொடர்புப்பட்டவர்கள் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

குருநாகல் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள 20 பேரில் 10 பேர் விடுமுறையில் சென்ற கடற்படையினர் எனவும், 2 பேர் விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் எனவும், 4 பேர் கடற்படையினரின் குடும்பத்தினர் எனவும், 4 பேர் பொதுமக்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.