’20’ வரைவை எதிர்க்க மனோ அணி தீர்மானம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 3
625.500.560.350.160.300.053.800.900.160.90 3 3


அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு எதிராக வாக்களிப்பதற்கு மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

முற்போக்குக் கூட்டணியின் அரசியல் உயர்பீடம் விரைவில் கூடி இது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும் எனவும் தெரியவருகின்றது.

20 ஆவது திருத்தத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமான அம்சங்கள் இருப்பதாலேயே அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கும், 20 இற்கு எதிராக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதற்கும் கூட்டணி தீர்மானித்துள்ளது.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது எனவும், வாக்கெடுப்பின்போது சிலர் நிடுநிலை வகிக்கவுள்ளனர் எனவும் வெளியாகியுள்ள தகவல்களை கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் நிராகரித்துள்ளார்.