சற்று முன்
Home / சினிக்குரல் / பிரபல நடிகர் வெளியிட்ட கொரோன கவிதை

பிரபல நடிகர் வெளியிட்ட கொரோன கவிதை

கொரோனா வைரஸால் உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அஞ்சி நடுங்கி வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கொரோனாவை கண்டு அஞ்ச வேண்டாம் என்பதை குறிப்பிடும் வகையில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கவிதையில் அவர் கூறியிருப்பது என்னவென்றால்

வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்?
ஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்?
சோகம் கற்பிக்காததை மோகமா கற்பிக்கும்?
தாகம் கற்பிக்காததை தடாகமா கற்பிக்கும்?

வாழ்…
ஏழ்மை இழிவன்று
அது செல்வத்தின் முதல் படி
தாகத்துடன் நட, தடாகம் தென்படும்

மோகமும், சாவதும், இறைவனும் இன்றியமையாததன்று
போவதும் வருவதும் போக்குவரத்தன்றி
வேறென்ன சொல்லு தோழா

என அந்த கவிதையில் குறிப்பிட்டு உள்ளார்.

வழக்கம்போல் கமல்ஹாசனின் இந்த கவிதைக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஹிந்தி இசையமைப்பாளர் வாஜித் கான் காலமானார்

ஹிந்தி இசையமைப்பாளரும், பாடகருமான வாஜித் கான்(42) சிறுநீரக நோய் தொற்று பிரச்னை காரணமாக காலமானார். தனது ...