சற்று முன்
Home / சினிக்குரல் / பிரபல பாடகியின் பயோபிக்கில் சமந்தா

பிரபல பாடகியின் பயோபிக்கில் சமந்தா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பிரபல பாடகியின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகம் வந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் முதல்- மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்த வரிசையில் பிரபல கர்நாடக இசை பாடகி பெங்களூரு நாகரத்னம்மாளின் வாழ்க்கை சினிமா படமாகிறது.

இவர் திருவையாறு ஆராதனை விழாவில் பெண் இசைக்கலைஞர்களும் பங்கேற்க வழி செய்தவர். இவரது மூதாதையர்கள் மைசூரு அரசவையில் பாடகர்களாக இருந்தவர்கள்.

நாகரத்னம்மாளின் வாழ்க்கை கதை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்குகிறார். இவர் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். படத்தில் நாகரத்னம்மாள் வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஹிந்தி இசையமைப்பாளர் வாஜித் கான் காலமானார்

ஹிந்தி இசையமைப்பாளரும், பாடகருமான வாஜித் கான்(42) சிறுநீரக நோய் தொற்று பிரச்னை காரணமாக காலமானார். தனது ...