சற்று முன்
Home / சினிக்குரல் / விஜய கார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுக்கள்

விஜய கார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுக்கள்

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சமூக விலகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமூக விலகளை மிக தெளிவாக இரண்டே வரிகளில் விளக்கும் சிவகார்த்திகேயன் பேசிய வசனம் ஒன்றை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வசனம் இதுதான்:

நீ யாரா வேணும்னா இரு
எவனா வேணும்னா இரு ; ஆனா
என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு

இந்த ட்வீட்டை பார்த்த சிவகார்த்திகேயன், இந்த வசனத்தை ஞாபகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி என்றும் இதற்குரிய பெருமை ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் அவர்களுக்குத்தான் போய் சேரும் என்றும் இரண்டே வரிகளில் அவர்தான் சமூக விலகளை மிக அழகாக விளக்கி இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் வசனத்தை சரியான நேரத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ஞாபகப்படுத்திய திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஹிந்தி இசையமைப்பாளர் வாஜித் கான் காலமானார்

ஹிந்தி இசையமைப்பாளரும், பாடகருமான வாஜித் கான்(42) சிறுநீரக நோய் தொற்று பிரச்னை காரணமாக காலமானார். தனது ...