சற்று முன்
Home / சினிக்குரல் / அஜித், விஜய் தயவுசெய்து உதவுங்கள் – கெஞ்சி கேட்ட பிரபல நடிகை

அஜித், விஜய் தயவுசெய்து உதவுங்கள் – கெஞ்சி கேட்ட பிரபல நடிகை

ரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், தயவுசெய்து உதவி செய்யுங்கள் என பிரபல நடிகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் வேலை இழந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதுபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்களுக்கு உதவவும் நிதி வசூலிக்கப்படுகிறது.

இதுவரை ஐசரி கணேஷ் ரூ.10 லட்சம், கார்த்தி ரூ.2 லட்சம், நகைச்சுவை நடிகர் சூரி ரூ.1 லட்சம், நாசர், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் தலா ரூ.50 ஆயிரம், பொன்வண்ணன், சாய்பிரதீப் ஆகியோர் தலா ரூ.25 ஆயிரம், சங்கீதா ரூ.15 ஆயிரம் வழங்கி உள்ளனர். பூச்சி முருகன், கோவை சரளா, சத்யபிரியா, ரோகிணி, லதா, சச்சு, நாகிநீடு, பிரபா ரமேஷ், சேலம் பார்த்திபன் ஆகியோர் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கி உள்ளனர். இதுவரை ரூ.15 லட்சத்து 65 ஆயிரத்து 100 வசூலாகி உள்ளது.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: “நடிகர் சங்கம் தற்போது கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறது. ரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து, உங்களால் முடிந்த உதவியை நடிகர் சங்க அறக்கட்டளைக்கு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா

ஹிந்தி நடிகை மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் ரெமோ டிசோசா ...